ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் பெரிய இலந்தைகுளம் பொட்டியம்மாள் கோயிலில் அனைத்து பங்காளிகள் சார்பாக பூசை செய்யப்படுகிறது
Monday, 31 August 2015
Friday, 26 June 2015
மூலவர் நல்லாண்டவர்
மலைபோல் இடர்வரினும் பனிபோல் விலகிவிடும்
மாமுண்டி துணையிருந்தால்.
மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர் கோவில் பற்றிய குறிப்புகள்:
மூலவர் : ஸ்ரீநல்லாண்டவர் – மாமுண்டி ஆண்டவர்
ஸ்தல விருட்சம் : காட்டு மின்னை
வாகனம் : யானை
காவல் தெய்வம் : புலி
கருப்பணசாமி வாகனம் : குதிரை
துவாபரயுக காலத்திலே ஸ்ரீராமன் மாயமானை வதம் செய்த இடம் மான்பூண்டி ஆறு எனப் பெயர் பெற்று
மாமுண்டி என மருவியதாக ஐதீகம்.
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி மாமுண்டி என்ற அரசரால் ஆளப்பட்டு வந்தது நீதிமானாக ஆட்சி செய்த அவர் சப்த கன்னிகையர் எனப்படும் பிராமி, மஹேஸ்வரி, கௌமாரி,
வைஷ்ணவி, வராஹி, இந்திராணி
மற்றும் சாமுண்டி ஆகியோருக்கும் அபயமளித்துக் காத்த்தார். அதுமுதல் அவர் நல்லாண்டவர், மாமுண்டி
ஆண்டவர் என்ற பெயர்களில் வழிபடப்படுவதும், சப்த
கன்னியரின் அண்ணாக வணங்கப்படுவதும் தொன்று தொட்ட நம்பிக்கை.
ஸ்ரீநல்லாண்டவர் சந்நிதிக்கு அருகில் உள்ள சப்த
கன்னியருக்கே முதல் பூசை செய்யப்படுகிறது.
வடதிசையிலிருந்து இங்கு எழுந்தருளிய ஸ்ரீ லாட
சந்நியாசி என்னும் சித்தர் சுவாமிகள் இவ்விடத்திலயே குடிகொண்டு தனிசந்நதியில்
அருள்பால்த்து வருகின்றனர். சந்நதியில் கால்களை கட்டிய நிலையில் ஆசி வழங்கி
வருகிறார்.
இரண்டாவது பூசை இலாட சந்நியாசி சுவாமிகளுக்கு
செய்யப்படுகின்றது.
மூன்றாவது பூசை நல்லாண்டவருக்கு
செய்யப்படுகின்றது. நல்லாண்டவர் திருவுருவம் சுரையால் ஆன
திருமூர்த்தமே ஆகும். தற்போது உள்ள கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்
பழமையானது ஆகும். தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தின் கீழும். பரம்பரை தர்மகர்த்தா கட்டுப்பாட்டிலும் உள்ளது.
பிற சந்நதிகள்:
நீண்ட மதில் சுவர்யுடைய இக்கோயிலின் உள்ளே அனுமதி விநாயகர், மதுரை வீரன் பரிகாரர், ஏழு கருப்பண்ணசாமி, ஓங்கார விநாயகர், பேச்சியம்மன், பட்டத்துயானை, நல்லாண்டவர் யானை. தெப்பக்குளம் முருகன் ஆஞ்சநேய சுவாமிகள் ஆகியோர் தனிக்கோயில் கொண்டுள்ளனர். மொத்தம் 11 சந்நதிகள் உள்ளன.
நடை திறக்கும் நேரம்
காலை 7 மணி முதல் 1 மணி வரை
மாலை 3 மணி முதல் 8 மணி வரை
கோவில் முகவரி:
செயல்
அலுவலர்,
ஸ்ரீ நல்லாண்டவர் கோவில்,
மணப்பாறை 621306. திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தொலைபேசி 04332-267586
பிரார்த்தனை விபரம்:
குடும்பத்தில்
ஏற்படும் பலவித பிரச்சினைகள் சகோதர, சகோதரி
கருத்து வேற்றுமைகள், விசப்பூச்சி தொந்தரவுகள், மனப்பிரச்சினைகள் மற்றும் கல்வி, தொழில், வேலை, பயணம், பொருள்
உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்த பிரார்த்தனைகளயும் ஏற்று பனிபோல் நீக்கி
அருள் புரிகின்றார்.
நேர்த்தி கடன்:
பிரார்த்தனை
நிறைவேறிய பக்தர்களால் வேஷ்டி, மேல்
வஸ்திரம், பரிவட்டம் சார்த்தப்பட்டு அர்ச்னை நடைபெறுகிறது.
திருவிழாக்கள்:
நல்லாண்டவருக்கு
அனைத்து நாளும் திருநாளே தமிழ் புத்தாண்டு, ஆடி
வெள்ளி, ஆடி 18, ஆவணி உறியடி, புரட்டாசி
சனி, அம்புவிடு திருவிழா, கார்த்திகை தீபம், தைப்பொங்கள், மகாசிவராத்ரி, பங்குனி
உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சிறப்பு:
மூலவர் நாமம் அணிந்தும், பிரசாதமாக திருநீறு வழங்கப்படுவதும் ஆண்டவரின்
சிவ, விஷ்ணு அம்சத்தை புலப்படுத்துவதாகும்.
கோவில் இருப்பிடம்:
கண்ணுடையான்பட்டி கிராமம்
குளித்தலை பிரிவு (பேருந்து நிறுத்தம்)
திருச்சி நெடுஞ்சாலை - மணப்பாறை.
குளித்தலை பிரிவு (பேருந்து நிறுத்தம்)
திருச்சி நெடுஞ்சாலை - மணப்பாறை.
திருச்சிராப்பள்ளியிலிருந்து – 40km || மணப்பாறையிலிருந்து - 5km
இக்கோயிலில்
2011ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின்
அன்னதான திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஒருநாள் அன்னதான
நிதியாக 1000ரூபாயும், ஆண்டுக்கொருமுறை
அன்னதானம் குறிப்பிட் நாளில் வழங்கும் ஏற்பாட்டிற்கு நிரந்தர நிதியாக 12000
ரூபாயும் பெறப்படுகின்றது.
இயற்கை வளம்:
மான்பூண்டி எனப்படும் கல்லேங்கி ஆற்றின் கரையில் Prosopis
Julifora என்ற குட்டை மரங்கள் நிறைந்த சோலைகளின்
என்ற குட்டை மரங்கள் நிறைந்த சோலைகளின் மத்தியில் பலநூறு ஆண்டுகளாக சந்நதி கொண்டுள்ளார் ஆண்டவர். இத்தாவர வகைகளின் தொன்மையும், இந்த வகை தாவரங்கள் மட்டுமே வளரக்கூடிய மண்ணின் தன்மையும் அறிந்து, இந்திய அரசின் காட்டிலாக மூலமாக SACRED GROVE தெய்வீக சோலைகள் என்ற பெயரில் இந்த வகையான தாவரங்களும் மேலும் 63 வகையான பிற தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பந்திபொம்மி
நாயக்கனூர் மாமுண்டி செட்டியார் வகையறாக்கள், மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர் கோயிலில் வழிபாடு செய்யும் முறை.
ஸ்ரீ நல்லாண்டவரைக்
குலதெய்வமாகக் கொண்ட அனைத்து பங்காளிகளும் தங்களுக்குப் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு முதல் முடியிறக்கி
செய்யும் விழாவினை ஒவ்வொரு ஆடிமாதம் 18ம் தேதியில் செய்வது மரபாகும்.
ஆடி 1ந் தேதிக்கு முன்னதாகவே மதுரை அழகர் கோவிலுக்கு சென்று ராக்காச்சியம்மன் தீர்த்தத்தில் (நூபுர கங்கை நீராடி, தீர்த்தத்தை பாத்திரங்களில் எடுத்து வர வேண்டும். தங்கள் வீடுகளை ஆடி முதல் தேதி அன்று சுத்தம் செய்து வீட்டில் வழிபாடு செய்து தீர்த்தத்தை வீடு முழுவதும், சுற்றிலும் தெளித்து பல்வேறு விதமான தீட்டுகள் நீங்குமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். அதன்பின் கோவிலுக்கு சென்று வரும் வரை மாமிச உணவுகளை உண்ணக்கூடாது, பிற எந்த வீடுகளிலும், உணவருந்தவோ, தண்ணீர் அருந்தவோ கூடாது. தினசரி காலை, மாலை குளித்து குலதெய்வ இஷ்ட தெய்வங்களை வழிபட்டு வருதல் வேண்டும். தீட்டு காரியங்கள், தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடக்கூடாது.
கோயிலுக்குப் புறப்படும் முதல் நாள் நமது குல பங்காளிகளின்
பெண் தெய்வமான பொட்டியம்மாள் தெய்வத்தை வழிபட்டு புறப்படுதம் முறை வழக்கத்தில் உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் வாடிப்பட்டி, மணக்காட்டுர், பந்திபொம்மிநாயக்கனூரைச்
சேர்ந்த பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அலங்காநல்லூர் அருகிலுள்ள பெரிய இலந்தைக்குளம்
ஸ்ரீ பொட்டியம்மாள் கோவிலில் திரண்டு வழிபட்டு, அதிர்வேட்டு முழங்க
மாட்டுவண்டிகளில் புறப்படும் வழக்கம் இருந்துள்ளது. பின்னர் காலங்கருதி மணக்காட்டூரில் வழிபட்டு புறப்படும் நடைமுறையும்
இருந்துள்ளது.
புறப்படும் போது குலதெய்வ காணிக்கை உண்டியில் சேர்ந்துள்ள
பணத்தை கோவிலில் செலுத்த எடுத்துக் கொள்ள வேண்டும். நெற்றியில், நாமம் தரித்து தீபம் ஏற்றி குலதெய்வ,
இஷ்ட தெய்வ, ஊர் தெய்வ வழிபாடுகளை முடித்து குலதெய்வ
காணிக்கை செலுத்தி பெரியவர்கள் காலில் பஞ்சாங்க, சாஷ்டாங்க நமஸ்காரங்கள்
செய்து தெய்வ சிந்தனையோடு குடும்பத்தாரோடும், பங்காளிகளுடனும்
புறப்பட்டுச் செல்லவேண்டும்.
கோவில் வழிபாடு:
அதிகாலையில் முடியிறக்கும் மண்டபத்தில் குழந்தைகளுக்கு
முடியிறக்கி பின் நீராட வேண்டும், பின் கோவில்
மண்டபத்தில் ஆசாரி வைத்து காதுகுத்தல் நிகழ்ச்சியை தாய்மாமன் மூலமாக நடத்திவிட வேண்டும்
இந்நிகழ்ச்சி கோவில் வழிபாடு முடிந்தபின் செய்வது, வழக்கத்தில்
உள்ளது.
ஸ்ரீ நல்லாண்டவர் சுவாமிக்கு புது மண்பானையில் சர்க்கரைப்
பொங்கலிட்டு படைத்து வழிபட வேண்டும்.
கோவிலில் உள்ள அனைத்து 11 சுவாமிகளுக்கும் வழிபாடு செய்ய வேண்டும்.
அனைவரும் நாமம் தரித்து விட வேண்டும். மாமன் முறையினர் நாமம் தரித்துவிடும் நடைமுறை
உள்ளது.
புளியடி கருப்பண்ண சாமி பூசை:
இந்த கோவில், மதில்சுவருக்கு வெளியில் வடபுறம் உள்ளது. ஆட்டுக்கிடா, விருகம்,
சேவல் காவு கொடுத்து மூன்றின் ஈரளையும் தீயில்சுட்டு சுவாமிக்குப் படைத்து முப்பாசை செய்ய
வேண்டும். மாமிசத்தையும்
சமைத்து, அனைத்து வழிபாடும் முடிந்தபிறகு
போஜனம் செய்ய வேண்டும்.
ஸ்ரீ நல்லாண்டவர் வழிபாடு:
5 மீட்டர் வெண்பட்டு, நிலைமாலை, தேங்காய், வாழைப்பழம்
அருச்சனை பொருட்களுடன் அனைவரும் கூடி சந்நிதானம் சென்று அர்ச்சனை செய்தும்,
குழந்தைகளை சுவாமி பாதத்தில் இடத்தியும், தமது
வேண்டுதல்களை கூறியும், நிறைவேறிய பிரார்த்தனைகளுக்கு நன்றிகள்
பலவாறு கூறியும், தீய சிந்தனை அகற்றியும் ஒருமுகப்பட்டு வழிபட,
வேண்டுபவர்க்கு வேண்டியன செய்தும் இக்கட்டான நேரங்களில் தமது யானை மீது
பவனி வந்து, இருக்கும் இடம் தேடி வந்து அருள் செய்யும் ஒப்பற்ற
தெய்வம் ஆண்டவர் ஆவார். இன்றும் கஷ்ட சூழ்நிலைகளில் மனமுருகப்
பிரார்த்தனை செய்பவர்கள் தமது இடங்களில் யானையில் பவனி வரும் ஆண்டவரையும், கருப்பண சுவாமியின் குதிரை குளம்பொலி சத்தத்தையும் உணர்வதும், தமது கஷ்டம் தீரப் பெறுவதும் அற்புதங்களாம். திருநீற்றுப் பிரசாதம் பெற்று சிவசிவா எனச்சொல்லி நெற்றிப்பட்டையாக
அணிய வேண்டும். வீட்டிற்கும் கொண்டு சென்று அண்டை
அயலாருக்கும் கொடுத்து தாமும் அணிந்து வருதல் வேண்டும் பின்னர் காணிக்கைகளை உண்டியலில்
செலுத்திவிட வேண்டும்.
சப்தகன்னிமார் வழிபாடு:
7 பேருக்கும் அர்ச்சனை ஆராதனை செய்து
வழிபட்டு திருநீறு பெற்று அணிய வேண்டும்.
இலாட சந்நியாசி:
தேங்காய்
வாழைப்பழத்துடன் கூடிய அர்ச்சனை, ஆராதனை செய்து
திருநீறு அணிய வேண்டும். உள்ளன்போடு பிரார்த்திப்பவர்களின் கனவில்
வந்து ஔவிதம் தந்து, தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் அற்புத
சித்தமாகன் இவர் ஆவார்.
மதுரைவீரன் வழிபாடு:
கருங்கச்சை
(கருப்பு தூண்) சாத்தி மதுசுருட்டு சமான், தேங்காய் பழம் வைத்து அர்சனைகள்
செய்து வழிபட்டு திருநீறு அணிய வேண்டும்.
பேச்சி ராக்காச்சி வழிபாடு:
வீட்டில் இருந்து பச்சைநெல் கொண்டு சென்று உடனே
வேகவைத்து, காயவைத்து குத்தி அரிசியாக்கி சமைத்து
படையல் வைக்க வேண்டும். முட்டைக்கோழி ஒன்றை அதன் உரோம்ம்
கூட வெளியில் செல்லாமல் அடித்து, குடும்பத்தலைவி
மட்டும், பிறர் உதவியில்லாமல் சமைத்து, முருங்கைக்காய் சேர்த்து புது மண்பானையில் குழம்பு வைக்க வேண்டும்.
இரண்டு பங்காளிகள் சேர்ந்து, சந்நிதி முன் அமர்ந்து
சாப்பிட வேண்டும். பிறகு எதிர் திசையில் இருவரும் 1 மைல் தூரம் ஓடிவிட்டு பின்பு கோயிலுக்கு வர வேண்டும்.
மற்ற சந்நிகள்:
யானை, குதிரை சிலைகளுக்கு கற்பூர தீபம் ஏற்றி வழிபடுதல் வேண்டும்.
அனைத்து உறவினர்களும் ஒன்று கூடி 11 சந்நதிகளுக்கும்
உண்டான பூசை சாமான்களை தனித்தனியாக தட்டுகளில் ஏந்தி கிழக்கு புற வாயிலில் நுழைய வேண்டும்
மதில் வாசலில் கீழ் உள்ள பட்டியக்கல்லை மதிக்காமல் தொட்டு வணங்கிச் செல்ல வேண்டும்.
நேராக கொடிமர பலியீடங்களை வணங்கி ஆண்டவர் சந்நிதி சென்று வழிபட வேண்டும்.
பின் சப்த கன்னியர் சந்நிதி, இலாட சந்நியாசி,
யானை கருப்பர், மதுரைவீரன், பட்டத்து யானை, ஸ்தல மரம் காட்டு மின்னை, விநாயகர், பேச்சி ராக்காச்சி தெய்வங்களை வழிபட்டு முன்
மண்டபத்தில் அமர வேண்டும். இறை சிந்தனையுடன் தேங்காய் பழங்களை
பகிர்ந்து உண்ண வேண்டும். உச்சி காலத்தில் லாட சந்நியாசி முன்
உள்ள மண்டபத்தில் நடைபெறும் மூலவர் அபிஷேகத்தினைத் தரிசனம் செய்வதும். அபிஷேகப் பொருட்களான பால், தேன், பழங்கள் முதலியன காணிக்கை தருதலும் பாவமும், பிறவியும்
நீக்கி அருளைத் தர வல்லனவாம். பின் கொடிமரத்துக்குக் கீழ்புரம்
பஞ்சாங்க, அஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்து, சுவாமியைத் துதி செய்து ஆலயத்தினின்றும் அரிதின் நீங்கலாம்.
நமது குல பங்காளிகளின் பெண் தெய்வமான ஸ்ரீ பொட்டியம்மாள் வழிபாடு:
அகில உலகமெல்லாம் படைத்து காத்துவரும், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை பராசக்தியின் திருவுருவாய் சாந்த ஸ்வரூபினியாய்.
மதுரை ஜில்லா அலங்காநல்லூர் அருகில் பெரிய இலந்தைகுளம் என்னும் புண்ணிய ஸ்தலத்தில் குடிகொண்டு எட்டுத்திக்கும் ஆட்சிபுரிந்துவருபவள்
அன்னை ஸ்ரீ பொட்டியம்மாள் ஆவார்.
பலநூறு ஆண்டுகளாக குச்சு வீட்டில் வாழ்ந்து சில பல ஆண்டுகளுக்கு
முன் செகங்கற்றளியாக எழுப்பப்பட்டு
கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டுள்ளது. மூர்த்த கருங்கல்
சிற்பமாகும்.
அங்குள்ள நமது இனத்தவரால் தினசரி பூசைகள் குறைவற நடைபெற்று வருகின்றன.
அன்னையின் வழிபாட்டுக்கு கொண்டையில்
சூட ஒரு முழம் மல்லிகையும், கருப்பட்டி, எள் கொண்டு ஆட்டிய தூய நல்லெண்ணெயும் மற்றும் தூப, தீப சாமான்களும் கொடுத்து வழிபட வேண்டும்.
மஞ்சள் குங்குமம் பெற்று பூசி வீடுகளுக்கும் கொண்டு
சென்று பூசி வரவேண்டும். அன்னைக்கு ஒவ்வொரு ஆவணி பவுர்ணமி அன்றும் நமது பங்காளிகள்
சார்பாக சகலவிதமான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
(கோவிலுக்கு மதுரையிலிருந்து சிட்டிபஸ் வசதி உள்ளது.)
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் தாலூகா செந்துறை கிராமம் பந்தி பொம்மி நாயக்கனூர் என்ற மல்லநாயக்கன்பட்டியைச்
சேர்ந்த ஸ்ரீ மாமுண்டி செட்டியார் வகையரு வரலாறு விபரம்:
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகில் பொய்கைப்பட்டி ஜமீன் பகுதியில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்த நமது முன்னோர்கள் பிற்காலத்தில் தொழில் நிமித்தம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகருக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் ஸ்ரீமான் சாத்தாவு செட்டியார் காலத்தில் குட்டுப்பட்டி கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வரலாயினர். அந்த கிராமத்தில் பல ஏக்கர் நிலங்களில் நஞ்சை,
புஞ்சை சாகுபடியும் மதுரை மாநகர் மேலமாசிவீதியில் புளி, மிளகாய் வியாபார ஸ்தலமும் அமைத்தும், மேலும் பல்வேறு வகையான தோப்புகள் தோட்டங்கள், பலதரப்பட்ட வெள்ளாமை என்று புகழோடும், பொருளோடும் வாழ்ந்து வந்தார்கள்.
அவரது குமாரர் ஸ்ரீமான் பிச்சாண்டி செட்டியார் பின் அவரது குமாரர் ஸ்ரீமான் பாப்புலு செட்டியார் என வாழையடி
வாழையாக சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். ஸ்ரீமான் பாப்புலு செட்டியார் அவர்கள் சின்னத்தாய் அம்மாளை திருமணம் செய்விக்கப்பட்டு வாழ்ந்து
வந்தார். அவர்கள் ஸ்ரீமான் மாமுண்டி செட்டியார், ஸ்ரீமான் நல்லு செட்டியார்,
அங்கம்மாள் அம்மையார், பொட்டியம்மாள் அம்மையார் என நான்கு
மக்களைப் பெற்றனர்.
பாப்புலு
செட்டியார் தமது கடின உழைப்பினாலும் திறமையினாலும் பொருளீட்டி செல்வம் சேர்த்து குட்டிப்பட்டியில்
பெரும் மிராசுதாராக விளங்கினார். குடும்ப பொறுப்புகளோடு
சேர்த்து பொதுப் பணிகளிலும் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தார்.
கவுண்டர்
சமுதாயம், சேர்வை, அம்பலகாரர்,
நாயக்கமார், இசுலாமியர், செட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்களையும் சபையினராய் கொண்டு ஸ்ரீமுத்தாளம்மன்
கோவில் தர்மகர்த்தா பணியினையும் சிறப்புடன் செய்து வரலானார்.
நஞ்சை
நிலங்களில் கிணறுகள் தோண்டி நெல் பயிரிட்டும், புஞ்சை நிலங்களில் பருத்தி, எள், துவரை, சோளம், கம்பு, மிளகாய் உள்ளிட்ட தானியங்களைப் பயிர் செய்தும் செல்வம் பெருக்கினர்.
விவசாயப்பணிகளுக்காக
காளைமாடுகள் பூட்டிய மாட்டுவண்டிகளையும், வெளியூர் பயணங்கள், நத்தம் மதுரை போன்ற ஊர்களில் முக்கியஸ்தர்களைக்
கண்டுவரவும், வியாபார ரீதியான பயணங்களுக்கும் வெண்குதிரை பூட்டிய
சாரட் வண்டிகளையும் பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில்
சுதந்திர இந்தியாவில் வயது வந்தோர் வாக்காளரை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் வந்த்து. ஊர் பொது ஜனங்கள் சார்பிலே ஊர்த்தலைவர் பதவிக்கு
பொது சுபேட்சகர் ஒருவரை சிபாரிசு செய்தார்.
இவரது
குமாரர்களிலே தனித்தன்மையும் சிறந்த நிர்வாகமும் செய்து வந்தவர் நமது தாத்தா மாமுண்டி
செட்டியார் ஆவர்கள் அவரது துணைவியார் நாமெல்லாம் கண்டு பழகி வாழ பாக்கியம் செய்த அன்புத்
தெய்வம் ஸ்ரீமதி தாயகம்மாள் அவ்வா ஆவார்கள். அவர்கள் பாலமேடு என்னும் ஊரில் பிறந்தவர்கள்.
நமது தாத்தா
மாமுண்டி செட்டியார் அவர்கள் குட்டுப்பட்டியில் வாழ்ந்த பொழுது அவரை மலையூர் மக்கள்
அணுகி தங்கள் மஞ்சள் பெட்டி அபேட்சகரை ஜெயிக்க வைக்க வேண்டி அன்போடு கேட்டுக்கொண்டனர்
ஆனால் அபிப்ராய் பேதங்களைத் தவிர்க்க வேண்டி ஊரை விட்டுச் செல்ல முடிவு செய்தார். தனது மனைவி
தாயம்மாளுக்கு ஆண்வேடமிட்டு ஊரை விட்டு வெளியேறினார். அய்யனார் அருவி குடகிப்பட்டி, சுக்காம்பட்டி காட்டுப்பாதைகளில் துஷ்ட மிருகங்களையும், காடுமலை அருவிகளையும் தனியாகவே சமாளித்து செந்துறை, பாதி
பொம்மி நாயக்கனூர் சென்று சேர்ந்தார். களைப்பு மிகுதியால் சேர்ந்து வந்து சேர்ந்த இளந்தம்பதிகளை யாரென
விசாரித்து விபரமறிந்து சின்னக்காளை அய்யா என்ற மனிதாபிமான மிக்க பெரியவர் அடைக்கலம்
அளித்தார். பின்னர் அந்த ஊரில் குடிசை கட்டி
வாழ்ந்து வரலானார். பல்வேறு வகையிலான விவசாய வேலைகளில் ஈடுபட்டும்,
துணி வியாபாரம் செய்தும் வரலனார். ஊருக்கு அப்பால்
முடிமலையினைக் கடந்து அய்யலூர் ரயிலடிக்கு விவசாய சரக்குகளையும், வியாபார சரக்குகளையும் தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமாகவும்
கொண்டு சென்று வெளியூர் வாணிபமும் செய்து வந்தார்.
இவருக்கு
ஒன்பது குழந்தைகள் பிறந்தனர்:
1. பொன்னையா
செட்டியார்
2. பொட்டியம்மாள்
3. அங்கம்மாள்
4. அழகம்மாள்
5. அழகர்சாமி
(எ) போஸ் செட்டியார்
6. சாத்தாவு
7. சின்னத்தாயி
8. பரமன்
செட்டியார்
9. ஆண்டவன்
(எ) தனுசு செட்டியார்
10. கணேசன்
செட்டியார்.
அவர் தமது முன்னோர்களைப் போலவே கடும்
உழைப்பாளர் சிவந்த மேனியினர், தூய தோய்த்த வெண்ணிற
வேஷ்டியும் சட்டையுமே அணிவார். தாம் ஈட்டிய பொருள் கொண்டு அதே
இடத்தில் சுண்ணாம்புக் கரையால் மச்சுவீடு எழுப்பினார். சுற்றிலும்
மலைகள் சூழ்ந்த கிராமத்தில் கடும் குளிரைத் தாங்கும் வண்ணம் சன்னல்கள் குறைவாகவும்,
சுவர் தடிமன் அதிகமாகவும் வைத்து கட்டப்பட்டு உள்ளது. வெயில் காலத்தில் உஷ்ணம் தாக்காதவாறு விதானம் உயரமாக கட்டப்பட்டு உள்ளது.
மனையடி சாஸ்த்திரப்படி, அடுப்படி வீட்டுக்கு வெளியில்
வருமாறும், பள்ளமாக இருக்குமாறும் கட்டப்பட்டு ஓடு வேயப்பட்டது.
மிருகங்களும், ஜந்துகளும் உள்ளே வராதவாறு அடித்தளம்
உயரமாகவும் மூன்று வாசற்படிகளுடன் கட்டப்பட்டு, பின்பு நான்கு
படிகளாக மாற்றியமைக்கப்பட்டது. முன் தாழ்வாரத்தில் குடிசை வேயப்பட்டு
நிழல் தரும் இடமாகவும், விவசாய பொருட்களை சேமித்து வைக்கவும்
ஆட்டுக்குட்டிகளைக் கட்டும் வண்ணம் கழிகளாலும் அமைக்கப்பட்டு உள்ளது. தென்புறம் கோழிகளுக்கு கூண்டும், வீட்டு உபயோகத்திற்கான
தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டுள்ளன. வடபுறம் கால்நடைகள் கட்டவும்,
அவற்றுக்கு தண்ணீர் தர குழுதாடியும் உள்ளன. வீட்டின்
வடக்கு பக்கம் வியாபாரத்திற்கான கடைவீடு உள்ளது.
வீட்டிற்குள் உறிகட்டும் வளையங்களும் ஆட்டுஉரல், அம்மிக்கல், அரிசி குத்தும்
உரல்கள், உலக்கைகள், பருப்பு உடைக்கும்
திருகைகள், ஓய்வு நேரத்தில் விளையாட தாயக்கட்டங்கள் என அனைத்து
வசதிகளுடனும் கட்டப்பட்டது.
வடக்கு வாசல் வைத்த கோவில் வீடு நடுவில் உள்ளது. மாமுண்டி செட்டியார் காலத்து அனைத்து சுபகாரியங்கள்,
தமது ஒன்பது குழந்தைகளின் ஜெனை, நாமகரண சுபநிகழ்ச்சிகள்,
அவர்களின் திருமண சுப நிகழ்ச்சிகளும், தம்பதிகள்
சமேதராக பெரியவர்களிடம் ஆசி பெற்ற நிகழ்வுகள், பேரன் பேத்திகளின்
ஜெனை நாமகரனை சுபநிகழ்ச்சிகள், அந்த தம்பதிகளின் ஆசீர்வாதம் பெற்ற
நிகழ்வுகள், கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஓவ்வொரு முறையும் குலதெய்வ
வழிபாடு செய்ய புறப்பாடு ஆகும் போது அனைத்து உற்றாரும் சேர்ந்து வழிபாடு செய்த நிகழ்ச்சிகள்
பித்ரு வழிபாட்டு முறைமைகள், என நூற்றுக் கணக்கான சுபநிகழ்ச்சிகளும்
நிகழ்ந்து நமது குல, இஷ்ட தெய்வங்களும், பித்ருக்களும் பிரியமுடன் வசித்து ஆசீர்வாதம் செய்யும் இடமாகத் திகழ்ந்து வருகின்றது.
இந்த வீடானது அடுப்படி, தலைவாசல், கடைவாசல் என
கிழக்குப் பக்கமாகவும் பின்வாசல் மேற்கிலும் அமையப் பெற்று உயரமாக, கோட்டை போன்ற சுவர்களையும், திருடர் அணுகா வண்ணம் கம்பிகளுடன்
கூடிய சிறு சன்னல்களுடனும், முற்றம் இல்லாமலும் உறுதியான கதவுகளுடனும்
கட்டப்பட்டு காண்போர் ஆவரும் வண்ணம் பாரம்பரிய சின்னமாக எவ்வித சதிலமும் இன்றி திகழ்வது
நமது பாக்கியமேயாகும். ஸ்ரீ மாமுண்டி செட்டியார் தமது செல்வ செழிப்பால்
கிணறுகளுடன் கூடிய தோட்டங்களையும்,
மாமரத் தோட்டங்களையும், புஞ்சை நிலங்களையும்
சேர்த்தார்.
அனைத்து சமுதாய கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு
இறைவழிபாடு செய்தும், நன்கொடைகள் வழங்கியும் கூத்து,
நடனம், கோலட்டம், தேவராட்டம்,
கும்மி போன்ற கலைகளுக்கு பொருளாதரவும், தாமே பங்குபெற்றும்
ஆதரவு தந்தார்.
பொன்னர் சங்கர் உள்ளிட்ட புராண நாடகங்கள் நடைபெற பெரிதும் துணையாக இருந்தார். ஊரில் கோவிலின் அருமையை உணர்ந்து ஊர்ப் பொதுவாக மெயின் சாலை அருகில் அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலை உருவாக்கினார்.
Subscribe to:
Posts (Atom)